Saturday, March 10, 2012படம் தணிக்கை செய்யப்பட்ட பிறகு ஷாம், காஜல் அகர்வால் நடித்த படங்களின் காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. ரவிதேஜா, ஷாம், காஜல் அகர் வால், டாப்ஸி நடித்த படம் ‘வீராÕ. தெலுங்கில் ‘வீரய்யா‘ என்ற பெயரில் வெளியானது. ரமேஷ்வர்மா இயக்கி இருக்கிறார். போலீஸ் அதிகாரியான ஷாமை கொல்வதற்கு ஒரு கூட்டம் அலைகிறது. அவர்களிடமிருந்து ஷாமை பாதுகாப்பதற்கான அதிகாரியாக வருகிறார் ரவிதேஜா. திடீரென்று ஷாமை கொல்ல வரும் கூட்டத்திடமிருந்து காப்பாற்றுகிறார் ரவி தேஜா. போலீஸ் பணியில் இருக்கும் ரவிதேஜா பொய்சொல்லி அந்த பணிக்கு வந்தது பிறகு தெரிகிறது. அவர் ஏன் பொய் சொன்னார்? ஷாமை காப்பாற்றியது ஏன்? என்று கதை செல்கிறது. ‘Ôஇப்படம் தெலுங்கில் 2 மணி 50 நிமிடம் நீளத்துக்கு படமாக்கப்பட்டிருந்தது. தமிழுக்கு 40 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டதுடன் திரைக்கதையை மாற்றி அமைப்பதற்காக காட்சிகளை முன்னும் பின்னுமாக மாற்றினோம். தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு அப்படத்தை எப்படி மாற்ற முடியும் என்கிறார்கள். படத்தில் புதிய காட்சிகள் எதுவும் இணைக்கப்படவில்லை. ஏற்கனவே ஒப்புதல் அளித்த காட்சிகளைத்தான் மாற்றி அமைத்திருக்கிறோம். முதன்முறையாக காஜல் அகர்வால் இப்படத்தில் நடிப்பதற்கு பெரிய தொகை சம்பளமாக பெற்றார்ÕÕ என்றார் பட வசனகர்த்தா ராஜராஜா.
Comments
Post a Comment