Saturday, March 10, 2012அஜீத்தின் பில்லா 2 படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது அஜீத் பிறந்த மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திரையுலகில் நடந்த பெப்சி வேலை நிறுத்தம் காரணமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதனால் மீண்டும் தள்ளிப் போகிறது பில்லா 2 பட ரிலீஸ். இந்தப் படம் வரும் மே இரண்டாவது வாரத்தில்தான் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் தெரிவித்துள்ளார்.
சக்ரி டோலட்டி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வரும் ஏப்ரல் 25-ல் வெளியாகும் எனத் தெரிகிறது.
பில்லா படத்தில் டானாக வரும் ஹீரோ, அதற்கு முன் எப்படி இருந்தான், அவனது பின்னணி என்ன என்பதை விவரிக்கும் கதை இது.
அஜீத்- நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து, அதன் இரண்டாம் பாகம் பில்லா-2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. பார்வதி ஓமன குட்டன் நாயகியாக நடிக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களாக விறுவிறுப்பாக நடக்கிறது.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 13-ந்தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து ரிலீஸ் தேதி மே 1 என மாற்றப்பட்டது. அஜீத் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் படத்தை ரிலீஸ் செய்வது பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதினர்.
ஆனால் பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரிக்கார்டிங் போன்ற வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மே 2-வது வாரத்தில் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment