Saturday, March 10, 2012கைவிடப்பட்ட கமல் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். ‘ஒய் திஸ் கொல வெறிடிÕ பாடல் தனுஷுக்கு பாலிவுட்டிலும் படங்களை பெற்றுத் தருகிறது. ‘ராஞ்சாÕ என்ற இந்தி படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து தமிழ், இந்தியில் தயாராக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். கேரளாவில் பிரசித்திபெற்ற மார்ஷல் ஆர்ட்ஸ் சண்டை கலைகள் பிற்காலத்தில் ஜப்பானில் பிரபலமானது. இதை மையமாக வைத்து எம்.டி.வாசுதேவன் நாயர், ஜெயமோகன் ஆகியோர் எழுதியுள்ள கதைக்கு ‘19 ஸ்டெப்ஸ்Õ என்று பெயரிடப்பட்டுள்ளது. பரத்பாலா இயக்குகிறார். ஏற்கனவே இப்படத்தை கமல் நடிப்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது தொடங்கவில்லை. இந்த படத்தில்தான் தற்போது தனுஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதை இந்தியில் அஜய் தேவ்கனை வைத்து உருவாக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தியிலும் தனுஷே நடிப்பார் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தனுஷ் ஜோடியாக அசின் நடிக்க பேச்சு நடக்கிறது.
Comments
Post a Comment