'டேம் 999' படம் அரசியல் கதை என்பது தெரியாமல் நடித்துவிட்டேன்: வினய் வருத்தம்!!!

Wednesday,May,16,2012
முல்லை பெரியாறு அணை உடைவது போன்று கேரள இயக்குனர் சோஹன் ராய் எடுத்து கடந்த வருடம் ரிலீஸ் செய்த ‘டேம் 999’ படத்துக்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழக அரசு இப்படத்துக்கு தடை விதித்தது.

இதில் வினய் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் ‘உன்னாலே உன்னாலே’, ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மாதேஷ் இயக்கும் ‘மிரட்டல்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

மிரட்டல் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த வினய்யிடம் தமிழர்களுக்கு எதிரான ‘டேம் 999’ படத்தில் நடித்தது ஏன் என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த வினய் கூறியதாவது:-

‘டேம் 999’ படத்தில் நடித்தது பற்றி தமிழ் மக்களிடம் விளக்கமா சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அந்த படத்தின் கதையை என்னிடம் சொல்லி நடிக்க கேட்டனர். அதில் உள்ள அரசியல் எனக்கு அப்போது தெரியவில்லை. ஒரு படத்தக்கான கதை என்ற ரீதியில் தான் அதை பார்த்தேன். ஒரு நடிகனாக மட்டுமே அதில் நடித்தேன். அதன் பின்புலத்தில் உள்ள விஷயங்கள் சர்ச்சைகள் எதுவும் எனக்கு தெரியாது.

தமிழில் ஏற்கனவே முன்று படங்களில் நடித்து விட்டேன். இங்குள்ள ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். முன்று வருடத்துக்கு பின் மிரட்டல் படம் வருகிறது. இப்படத்தின் கதையை இயக்குனர் மாதேஷ் சொன்னபோது ரொம்ப பிடித்தது. நடிகக் சம்மதித்தேன். ஒவ்வொரு சீனையும் கவனமாக ரொம்ப மெனக்கெட்டு எடுத்துள்ளார்.

காதல், குடும்ப சென்டி மெண்ட், காமெடி ஆக்ஷன், எல்லாம் படத்தில் இருக்கிறது. சிவாஜி இல்லத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது பிரபு குடும்பத்தினர் எனக்கு விருந்து அளித்தது மறக்க முடியாத அனுபவம் சிவாஜி ஓர் சகாப்தம் அவர் அறையை சுற்றி காண்பித்தார்கள். பிரபுவை போல் நல்ல மனிதரை காண்பது அபூர்வம்.

என்று கூறினார்.

Comments