Friday, March 23, 2012'அயன்' கூட்டணி மீண்டும் இணைந்து வெளியாக இருக்கும் படம் 'மாற்றான்'. இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. படம் ஆரம்பிக்கும் போது வெளியான போஸ்டர் தவிர, எந்த ஒரு புகைப்படம் கூட வெளியாகாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு. '7ம் அறிவு' படத்திற்குப் பிறகு இப்படத்திற்கு தொடர்ச்சியாக 8 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி, கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. 'கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா' என்ற விவேகா வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு மெலடி பாடலை 'மாற்றான்' படத்திற்காக சமீபத்தில் தயார் செய்து இருக்கிறார். படத்தின் எடிட்டர் ஆண்டனி தனது டிவிட்டர் இணையத்தில் "மாற்றான் படம் இங்கே ஒரு டிவிஸ்ட், அங்கே ஒரு டிவிஸ்ட் என்று ஒரே டிவிஸ்ட்டா போகுது படம்.. இடைவேளையில் சீட்டை விட்டு எந்திரிக்க மாட்டீர்கள் அங்கேயும் இருக்கிறது ஒரு டிவிஸ்ட்" என்று தெரிவித்து இருக்கிறார். ஒருவேளை தியேட்டர் சீட்ல ஃபெவிகால் தடவி வெச்சிருப்பாங்களோ?! திருப்பம் திருப்பம்னு திரைக்கதைய திசை திருப்பிடாதீங்க......
Comments
Post a Comment