Sunday, March 04, 2012இந்தி படத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்க உள்ளார். ஐஸ்வர்யா இயக்கும் ‘3Õ படத்தில் கொலவெறி பாடல் மூலம் பிரபலம் ஆனதால் முதன்முறையாக இந்தி படத்தில் நடிக்கிறார் தனுஷ். ‘ராஞ்ஜாÕ என்ற இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். காசியை பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கதையில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வந்தது. தற்போது சோனம்கபூர் நடிக்க முடிவாகி உள்ளது. இவர் பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள். மணிரத்னம், தயாரிப்பாளர் டி.ராமநாயுடு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அனில் கபூர். தந்தையை போல தானும் தென்னிந்திய படவுலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது சோனம் கபூரின்ஆசை. அது தனுஷுடன் ஜோடியாக நடிப்பதன் மூலம் நிறைவேறி இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனாலும் ஏற்கனவே 2 இந்தி படங்களில் சோனம் கபூர் நடித்து வருகிறார். இதனால் தனுஷ் படத்துக்கு கால்ஷீட் தருவதில் பிரச்னை எழுமா என்ற பேச்சும் இருக்கிறது. ஆனால் இந்த வாய்ப்பை நழுவவிட சோனம் கபூருக்கு விருப்பம் இல்லாததால் மற்ற தயாரிப்பாளர்களுடன் பேசி இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது.
Comments
Post a Comment