Sunday, March 04, 20123 படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறப்பது போன்று படமாக்கப்பட்டதை ஐஸ்வர்யா மாற்றியமைத்துள்ளாராம்.
ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தான் எடுக்கும் முதல் படத்தில் கணவர் தனுஷை ஹீரோவாக போட்டு, ஸ்ருதி ஹாசனை ஹீரோயினாக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது.
இப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் இறந்துபோவது போல் ஐஸ்வர்யா காட்சியமைத்திருந்தார். படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். அதேசமயம், படத்தின் கிளைமாக்ஸ் சோகமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதை மாற்றி சந்தோஷமாக முடிவது போல் எடுக்கலாமே என்று ஐடியா கொடுத்தார்.
சூப்பர் ஸ்டார் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா என்ன. இதையடுத்து தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி தனுஷ் உயிருடன் இருப்பது போன்று மாற்றி விட்டாராம் ஐஸ்வர்யா.
ரசிகர்களும் சோகமான முடிவை விரும்பமாட்டார்கள் என்பதால் அவர் கிளைமாக்ஸை சந்தோஷமாக மாற்றியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்த படம் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது.
Comments
Post a Comment