Sunday, March 04, 2012எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலுக்கு நடனம் ஆட ஹீரோயின் தேடுகிறோம் என்றார் அருண் விஜய். நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘ஒஸ்திÕ படத்தில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பாடல் பாடினார். இதையடுத்து அருண் விஜய் நடிக்கும் ‘தடையற தாக்கÕ படத்திற்காக பாடல் பாடினார். இது பற்றி அருண் விஜய் கூறியதாவது: Ôமலை மலைÕ, Ôமாஞ்சா வேலுÕக்கு பிறகு நடிக்கும் படம் ‘தடையற தாக்கÕ. இதில் டிராவல்ஸ் நடத்துபவராக நடிக்கிறேன். வம்பு தும்புக்கு செல்லாமல் ஒதுங்கிச் செல்லும்போது, எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அதன்பிறகு அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது கதை. இடது கை பழக்கம் உள்ளவனாக நடிப்பதற்காக பல நாட்கள் பயிற்சி செய்தேன். மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயின்கள். 7 அடி உயர கருப்பு நிற மனிதன் காந்தி, வம்சி கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. மகிழ் திருமேனி இயக்கம். சுகுமார் ஒளிப்பதிவு. தமன் இசை. இப்படத்துக்காக எல்.ஆர்.ஈஸ்வரி குத்துப்பாடல் பாடினார். அவருடன் இணைந்து நானும் பாடினேன். இப்பாடலுக்கு தற்போதுள்ள முன்னணி ஹீரோயின் ஒருவர் ஆட உள்ளார். அதுபற்றி பேச்சு நடக்கிறது. இவ்வாறு அருண் விஜய் கூறினார்.
Comments
Post a Comment