'பில்லா 2'-க்கு கிடைத்த கலர்ஃபுல் பெருமை!!!

Friday, April, 13, 2012
அஜித் நடித்து வரும் 'பில்லா 2' படத்தில் எபிக் என்ற புதுவகை கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் ஆசியாவிலேயே இந்த கேமராவை பயன்படுத்திய முதல் திரைப்படம் என்ற பெருமையை 'பில்லா 2' படம் பெற்றிருக்கிறது. அஜித்தின் 'பில்லா' படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து 'பில்லா 2'-வை மிக பிரமாண்டமாக எடுத்து வருகிறார்கள். இதில் சாதாரண மனிதனான ஒருவர் எப்படி பில்லாவானான் என்பதை சொல்லியிருக்கிறார்கள். 'பில்லா 2' முழுக்க முழுக்க அஜித்தை மையமாக வைத்து பின்னப்பட்டிருப்பதால் அஜித்தின் தோற்றமும் நடிப்பும் பேசும்படி இருக்கும். இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை இயக்கியிருக்கிறார். அமெரிக்காவில் திரைப்பட தொழில்நுட்பம் படித்துப் பட்டம் பெற்றவர். ஹீரோயின்களாக பார்வதி ஒமணக்குட்டனும், பிரேசில் நாட்டு மாடலான ப்ரூனா அப்துல்லாவும் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஆசியாவிலேயே இதுவரை எந்த திரைப்படத்திற்கும் பயன்படுத்தாத எபிக் (Epic) கேமராவை பயன்படுத்தி முழுப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள். அதீநவீன தொழில்நுட்பத்தின் அடையாளமாக திகழும் எபிக் கேமராவின் மூலம் முழுக்க முழுக்க டிஜிட்டல் படமாக உருவாகியிருக்கிறது 'பில்லா 2'. ....
'பில்லா 2'க்கான டிஜிட்டல் போஸ்டரை ரெடி பண்ண நீங்க ரெடியா?

இந்தி திரையுலகினர் தங்களது படத்திற்கு வெவ்வேறு வகையில் விளம்பரபடுத்தி வருகிறார்கள். தற்போது இந்த விஷயத்தில் பாலிவுட்டை பின்பற்றுகிறது கோலிவுட். விரைவில் வெளியாக இருக்கும் 'பில்லா 2' படத்தினை மக்களிடம் கொண்டு செல்ல, இணையவாசிகளைக் கவர, புது யுக்தியை கையாள்கிறார்கள். அஜித்தின் ரசிகர்களுக்கு' பில்லா 2' படக்குழு புதுப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. "தமிழ்ப் புத்தாண்டு முதல் படம் வெளியாகும் வரை 'பில்லா 2' படத்தினை விளம்பரப்படுத்த இருக்கிறோம். ரசிகர்களுக்கான போட்டி ஒன்றையும் அறிவிக்கிறோம். 'பில்லா 2' படத்திற்கான டிஜிட்டல் போஸ்டரை நீங்களே வடிவமைக்கலாம். இதுவரை வெளியான 'பில்லா 2' போஸ்டர்களையும், இனி வெளிவர இருக்கும் புகைப்படங்களையும் அதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னணி இசைக்கு பில்லா தீம் மியூசிக்கையோ அல்லது பிற இசையையோ பயன்படுத்தி 10 முதல் 15 நொடிகளுக்குள் 'பில்லா 2' டிஜிட்டல் போஸ்டரை உருவாக்கி billa2contests@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மே மாதம் 15-ம் தேதி வரை இப்போட்டி நடக்கும். சிறந்த 10 டிஜிட்டல் போஸ்டர்களைத் தேர்ந்தெடுத்து ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் இணையங்கள் வழியே பதிவேற்றம் செய்யப்படும். அங்கு நடைபெறும் வாக்கெடுப்பில் 5 சிறந்த டிஜிட்டல் போஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு,' பில்லா 2' படத்திற்கான சிறப்புக் காட்சிக்கும் வரவேற்கப்படுவார்கள்" என அறிவித்திருக்கிறது தயாரிப்புத் தரப்பு. அப்டிபோடுங்க!அசத்தலாயிருக்குமே.. ஆர்வமா செய்வாங்க.. விளம்பரச் செலவும் மிச்சம்... !

Comments