ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சினேகா:போலீசார் விரட்டியடித்தனர்!!!

Wednesday,March,28,2012
நாகர்கோவிலில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர்கள் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் அண்ணா பஸ் நிலைய சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து சினேகா வெளியே வரும் போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.சிலர் சினேகாவுடன் கை குலுக்க ஆசைப்பட்டு அவரை நெருங்கினர்.

ஒரு கட்டத்தில் சினேகா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து பாதுகாப்புக்குநின்ற போலீசார் அவர்களை விரட்டியடித்து சினேகாவை மீட்டு அனுப்பி வைத்தனர்.

பள்ளி செல்வதை நிறுத்தாதீர்:நடிகை சினேகா அறிவுரை!!!

தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கோவை அருகே தடாகம் பகுதியில் ஜியோன் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. ஜியோன் தொண்டு நிறுவனத்தினர் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்து சமுதாய தொண்டாற்றி வருகிறார்கள்.

தற்போது இந்த பள்ளியில் 6 முதல் 14 வயது நிரம்பிய 50 மாணவ-மாணவிகள் தங்கி உணவு உண்டு படித்து வருகிறார்கள். மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில் நடிகை சினேகா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி தரம் உயர வேண்டும், பள்ளி செல்வதை இடையில் நிறுத்தக்கூடாது. பெற்றோர் கல்வி கற்பதை நிறுத்தி விட்டு குழந்தைகளை தொழிலுக்கு அனுப்ப கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி முருகேசன், ஸ்ரீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Comments