Thursday, March 22, 2012
காதல்' சரண்யா மழைக்காலம்' என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். ஓவிய கல்லூரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது. புதுமுகம் ஸ்ரீராம் கதாநாயகனாகவும், காதல்' சரண்யா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். எஸ்.தீபன் டைரக்டு செய்திருக்கிறார்.
சமுதாயத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறும் படம் என்று கூறி, தணிக்கை குழுவினர், இந்த படத்துக்கு யு' சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.
கதைப்படி, காதல்' சரண்யா ஓவிய கல்லூரியில் நிர்வாண போஸ்' கொடுப்பது போலவும், அதை கதாநாயகன் ஓவியமாக வரைவது போலவும் ஒரு காட்சி இடம் பெறுகிறது.
இந்த காட்சி, தத்ரூபமாக அமைய வேண்டும் என்று டைரக்டர் தீபன் விரும்பினார். அதை, காதல்' சரண்யாவிடம் எடுத்து சொன்னார். அதற்கு, சரண்யாவும் சம்மதித்தார். அதன்படி, அவர் நடித்த நிர்வாண காட்சி, மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டது.
நிர்வாண காட்சியில் நடித்தது பற்றி, காதல்' சரண்யா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
படத்தின் கதைக்கு அந்த நிர்வாண காட்சி அத்தியாவசியமானது என்று டைரக்டர் தீபன் என்னிடம் கூறினார். இதற்காக, ரூ.36 ஆயிரம் செலவில், ஸ்கின் டிரெஸ்' (தோல் போன்ற உடை) தயார் செய்யப்பட்டது. அதை அணிந்து கொண்டு துணிச்சலாக நடித்தேன்.
படத்தில், 180 வினாடிகள் (3 நிமிடங்கள்) வருகிற இந்த காட்சிக்காக, ஒரு நாள் இரவு முழுவதும் நடித்தேன். இரவு 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு, விடிய விடிய நடந்தது. அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்பு முடிந்தது.
ஸ்கின் டிரெஸ்' அணிந்திருந்ததால், எனக்கு எந்த பயமோ, நடுக்கமோ ஏற்படவில்லை. அந்த காட்சியை ரகசியமாக படம் பிடிக்கவில்லை. டைரக்டர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேரும் உடன் இருந்தார்கள்.
எப்படி உட்கார வேண்டும், எப்படி போஸ்' கொடுக்க வேண்டும் என்று டைரக்டர் எனக்கு சொல்லிக்கொடுத்தார். அவர் சொன்னபடி நடித்தேன். ஆபாசம் இல்லாமல், அறுவறுப்பு இல்லாமல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. அதனால்தான் மழைக்காலம்' படத்துக்கு தணிக்கை குழுவினர், யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த படத்தில் இருந்து காதல்' சரண்யா என்ற பெயரை, சரண்யா நாக்' என்று மாற்றிக்கொண்டேன். நாக்' என்பது, என் குடும்ப பெயர்.'' இவ்வாறு சரண்யா நாக் கூறினார்.
Comments
Post a Comment