தெய்வத்திருமகளுக்கு சர்வதேசவிருது-கொடுமையா,பெருமையா!!!

Wednesday,March,21,2012
வெளிநாட்டுக்காரன் நம்மூருக்கு வந்து நம் தண்ணியை எடுத்து நம்மை வைத்தே சுத்திகரித்து நமக்கே அதை விற்பதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது சினிமாக்காரர்கள்தான். அவர்கள் படத்தை சுட்டு அவர்களுக்கே திரையிட்டு காட்டி விருதும் வாங்குவது சாதாரண விஷயமா?

ஆனால் தெய்வத்திருமகள் விஷயத்தில் சின்ன வித்தியாசம். சுட்டது ஹாலிவுட்டில் விருது வாங்கியது ஜப்பானில்.

ஐ யம் சாம் படத்தின் காப்பியான இதனை காட்ஸ் ஓன் சைல்ட் என்ற பெயரில் ஜப்பானில் நடக்கும் ஆசிய திரைப்படவிழாவான ஒசாகா திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவுக்கு அனுப்பினர். பஞ்சத்தில் நடக்கும் விழா போலிருக்கிறது. மொத்தமே 9 திரைப்படங்களைதான் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்று ஜுரிகள். நமது காப்பிக்கு சிறந்த படத்துக்கான கிராண்ட் பிரிக்ஸ் விருது, சிறந்த என்டர்டெயினர் படத்துக்கான விருது என இரண்டு கிடைத்திருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் இயல் விருதை சர்வதேச விருது என்று டபாய்த்து விழா எடுத்த மாதிரி இவர்களும் ஏதாவது செய்வார்கள் என்று தோன்றுகிறது.

வர வர சர்வதேச விருதோட தொல்லை தாங்க முடியலைப்பா.

Comments