Thursday, March 08, 2012நடனத்தில் சொதப்பியதால் தனது படத்திலிருந்து கரீஷ்மா கபூரை நீக்கவிட்டார் பிரபு தேவா.பிரபுதேவா இயக்கும் இந்தி படம் ‘ரவுடி ரத்தோட்Õ. இப்படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட கரீனா கபூரின் அக்காவும் நடிகையுமான கரீஷ்மா கபூரை தேர்வு செய்தார் பிரபு தேவா. நடனம் ஆட ஒப்புக்கொண்டு ஷூட்டிங்கிற்கு வந்தார் கரீஷ்மா. அவரிடம் போஜ்புரி பாணியிலான காஸ்டியூம் கொடுத்து அணியச் சொன்னபோது, மறுத்துவிட்டார். இதனால் அந்த பாடல் படமாக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பட தயாரிப்பாளர் மீண்டும் கரீஷ்மாவை தொடர்புகொண்டு சமாதானம் செய்தார். இதையடுத்து நடிக்க ஒப்புக்கொண்டார். பாடலின் ஒத்திகைக்காக அவரை பிரபுதேவா வரவழைத்தார். ஆனால் உடல் எடையை குறைத்து ஒல்லிபிச்சானாகி இருந்த கரீஷ்மாவை கண்டதும் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்தார். இப்பாடலுக்கு கொஞ்சம் உடல் எடை கூடிய நடிகை நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று கூறினார். இருந்தாலும் 2 நாள் ஒத்திகை நடத்தினார். அவரது நடன அசைவுகளில் திருப்தி இல்லாததால் கரீஷ்மாவை நீக்கினார். பின்னர் இப்பாடல் காட்சியில் 3 நட்சத்திரங்களை நடிக்க வைத்து படமாக்கினார். ‘ஏஜென்ட் வினோத்Õ படத்தில் நடித்த கவர்ச்சி நடிகை மரியம் ஜாதிரா, முமைத்கான் மற்றும் ஷக்தி மோகன் என்ற இளம் நடிகர் ஆகியோரை வைத்து இப்பாடலை படமாக்கினார்.
Comments
Post a Comment