Sunday, January 15, 2012சில்க்ஸ்மிதா வேடத்தில் த டர்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்தவர் வித்யாபாலன். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். வித்யாபாலனை ரஜினி பாராட்டியுள்ளார்.
நடிகை சவுந்தர்யா மறைந்த பிறகு அவரது இடம் காலியாக இருந்தது என்றும் அந்த இடத்தை வித்யாபாலன் நிரப்புகிறார் என்றும் ரஜினி கூறியுள்ளார்.
இதற்கு வித்யாபாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ரஜினி, திரையுலகின் சகாப்தம். அவர் சவுந்தர்யாவுடன் என்னை இணைத்து பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் விருது வழங்கும் விழா ஒன்றில் என்னையும் இந்தி நடிகைகள் சிலரையும் மேடைக்கு அழைத்து அருகில் நிற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த சம்பவம் என்றும் மறக்க முடியாதது.
தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக கதைகள் கேட்டு இருக்கிறேன். ரஜினியுடன் ஜோடியாக நடிக்கவும் விருப்பம் உள்ளது. அதற்கான வாய்ப்பு வந்தால் விடமாட்டேன்.
Comments
Post a Comment