எதிர்கால தொலைக்காட்சித் துறை வல்லுனர்கள்!!!

Sunday, January 15, 2012
இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிலையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
•இதற்காக ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர்.
•தொலைக்காட்சித் துறையானது மிக வேகமாக வளர்ந்து வரும் மிக பிரகாசமான எதிர்காலம் கொண்ட துறையாக உள்ளது.
•இத்துறையில் நுழைய விரும்பும் எதிர்கால தொலைக்காட்சித் துறை வல்லுனர்களை ஊக்குவிக்க ’தினமலர்’ விரும்புகிறது. உண்மையின் உரைகல்லாகத் திகழும் தினமலர் எப்போதும் சமூக நலனிலும், சமுதாய வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருவது அனைவரும் அறிந்ததே.
•இந்த வகையில், மதுரை, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியுடன் இணைந்து ஒரு புதுமையான திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது.
•ஊடகவியல் துறையில், குறிப்பாக தொலைகாட்சி நிகழ்ச்சித் தயாரிப்புத்துறையினை தமது துறையாக தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களுக்காக ”மாணவ இயக்குனர்” எனும் இந்த ஆறு நாள் குறும்படத் தயாரிப்புப் பயிற்சியினை முழுக்க, முழுக்க இலவசமாக தினமலர் மற்றும் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, மதுரை வழங்க உள்ளது.
•இதற்காக ஆகும் பயிற்சிக் கட்டணம், தங்குமிடம், உணவு ஆகியவை உட்பட அனைத்து செலவுகளையும் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவிருக்கிறது.
•நவீன தொழில்நுட்பம் கொண்ட கேமிரா, மற்றும் எடிட்டிங் உபகரணங்களோடு, திரைக்கதை, வசனம், இயக்குதல் ஆகிய அடிப்படைப் பயிற்சிகள் மற்றும் படத்தயாரிப்புப் பயிற்சி ஆகியவை இந்த பயிற்சி முகாமில் வழங்கப்பட உள்ளன.

அனுமதித் தகுதி மற்றும் வழிமுறைகள்:

◦இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான தகுதியானது தற்போது தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியில் +2 படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். மேலும் தமது எதிர்காலத்தை ஊடகவியல் துறை எனக் கருதுபவராக இருத்தல் வேண்டும்.
◦இப்பயிற்சிக்கான விண்ணப்பத்தை தினமலர் இணையதளத்திலிருந்து இறக்கிப் பூர்த்தி செய்து அனுப்பவும். அவ்வாறு அனுப்பும்போது மாணவர்கள் அத்துடன் ஊடகவியலை அதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பினை ஏன் தங்களது எதிர்காலமாகக் கொள்ள விரும்புகின்றனர் என்பது குறித்த கட்டுரை ஒன்றை சுமார் இரு பக்க அளவில், 400 வார்த்தைகளுக்குக் குறையாமல் எழுதி வரும் 10 பிப்ரவரி 2012-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
◦அத்துடன் மாணவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கலை இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ்கள், ஏதாவது இருப்பின், இத்துடன் இணைத்து அனுப்பலாம். ஆயினும் இது கட்டாயமில்லை.
◦தங்களது கட்டுரை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
◦தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு வரும் 2012 ஏப்ரல் மாதம் மதுரை, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் இப்பயிற்சி முகாம் நடைபெறும்.
◦ பயிற்சி முகாமில் பங்கு பெறும் மாணவர்களுக்கு ’மாணவ இயக்குனர்’ எனும் சான்றிதழ் வழங்கப்படும்.
◦பயிற்சி முகாமில் மாணவர்களால் தயாரிக்கப்படும் படங்கள் தினமலர் இணைய தளத்தில் வெளியிடப்படும்.
◦மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை தினமலர் இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இணையதள முகவரி:
http://www.rlinstitutes.com/rliams/event/App.pdf

Comments