இனி 'பார்ட்டி டான்ஸ்' தெரியவில்லை என யாரும் ஒதுக்க முடியாது - அசின்!!!

Wednesday,May,30,2012
பாலிவுட்டில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் பாலிவுட் கலாச்சாரத்துக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இது நடிகைகளுக்கு பால பாடம்.

பின் மாலை நேர விருந்துகள், விருந்து முடிந்ததும் நடனங்கள் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் ஒத்துப் போனால்தான் அங்கே குப்பை கொட்ட முடியும்.

இங்கிருந்து போன நடிகைகள் அனைவருமே அத்தனைக்கும் தயாராகத்தான் போகிறார்கள். அசினும் அப்படிப் போனவர்தான். ஆரம்பத்தில் தன்னுடன் பெற்றோரையும் வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இதனை பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் விரும்பவில்லை என்று தெரிந்ததும் தனி ப்ளாட் எடுத்தார்.

அடுத்து மாலை நேர விருந்துகளில் பங்கேற்க மறுத்து வந்தவர், லண்டன் ட்ரீம்ஸ் படுதோல்வியைத் தழுவியதும், அந்த பிடிவாதத்தையும் தளர்த்திக் கொண்டார்.

இப்போது மாலை நேர விருந்துக்குப் பிந்தைய நடனங்களில் பங்கேற்கவும் தயாராகி வருகிறார்.

இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் ஆடும் வால்ட்ஷ் என்ற நடனத்தையும் அசின் கற்க துவங்கியுள்ளார். மேற்கத்திய நடனத்தையும், கிராமிய நடனத்தையும் வைத்து இந்த வகை நடனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது சினிமாவுக்கானதல்ல. நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகளில் ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவது.

"இந்த நடனம் தெரியாததால்தான் என்னை பலரும் தனிமைப்படுத்தினர். இனி என்னை யாரும் ஒதுக்க முடியாது," என தன் தோழிகளிடம் சொல்லி வருகிறாராம்!

Comments