உள்ளத்தை அள்ளித்தா மாதிரியான படம்! கலகலப்பு பற்றி சுந்தர் சி.,!!!

Monday, April, 23, 2012
கலகலப்பு படம் உள்ளத்தை அள்ளித்தா படம் மாதிரியான முழுக்க முழுக்க நகைச்சுவை படம் என்று டைரக்டர் சுந்தர் சி., கூறினார். கலகலப்பு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய டைரக்டர் சுந்தர் சி., இது நான் இயக்குகிற 25வது படம். இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. கதை எழுதும்போதே யார் - யார் நடிக்க வேண்டும்? என்பதை மனதில் வைத்துதான் எழுதினேன். இதற்கு முன்பு நான் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா பாணியில், முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

கும்பகோணத்தில், 1920ம் வருடம் முதல் இருந்து வரும் மசாலா கபே என்ற ஹோட்டலை பற்றிய கதை. ஒரு காலத்தில், ஓஹோ என்று பிரபலமாக இருந்த அந்த ஹோட்டல், பிற்காலத்தில் டல் அடிக்கிறது. தாத்தா காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அந்த ஹோட்டலை பேரன்கள் விமல், சிவா இருவரும் மீண்டும் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள். இதில் அஞ்சலி சுகாதார ஆய்வாளராகவும், ஓவியா கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறார்கள். அஞ்சலியின் மாமாவாக சந்தானம் நடிக்கிறார். இதற்கு முன்பு 2 கதாநாயகிகளை வைத்து நான் சில படங்களை இயக்கியிருக்கிறேன். அவர்களை வைத்து படத்தை முடிப்பதற்குள், போதும் போதும் என்றாகி விடும். உடையலங்காரத்தில் இருந்து எல்லா விஷயத்திலும் இரண்டு கதாநாயகிகளும் சண்டை போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு இடையே பஞ்சாயத்து பண்ணுவதற்கே நேரம் சரியாக இருக்கும்.

ஆனால் அஞ்சலியும், ஓவியாவும் அதற்கு நேர் மாறாக இருந்தார்கள். இரண்டு பேரும் நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டார்கள். ஒரே அறையில் தங்குகிற அளவுக்கு ஒற்றுமை. இருவரும் ஒருவரையொருவர், டார்லிங்... டார்லிங்... என்றுதான் அழைப்பார்கள். இதேபோல் விமலும், சிவாவும் மாமா... மச்சான்... என்று அழைக்கும் அளவுக்கு நட்பாகிக விட்டார்கள், என்றார்.

Comments