கல்யாண செலவுக்காக திருமண மண்டபத்தை விற்றாரா சினேகா?:சினேகா நடிக்கும் ஹரிதாஸ் பாகவதர் பட ரீமேக் இல்லை!

Monday, March 19, 2012
சினேகா நடிப்பில் உருவாகும் ஹரிதாஸ் , தியாகராஜ பாகவதர் நடித்த படத்தின் ரீமேக் இல்லை என்றார் இயக்குனர் குமாரவேலன்.
பிருத்விராஜ் நடித்த நினைத்தாலே இனிக்கும், பரத் நடித்த யுவன் யுவதி படங்களை இயக்கியவர் ஜி.என்.ஆர்.குமாரவேலன். அடுத்து ஹரிதாஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:தியாகராஜ பாகவதர் நடித்து 3 தீபாவளிகளை கண்டு, தொடர்ந்து ஒரே தியேட்டரில் ஓடிய படம் ஹரிதாஸ். இப்பட தலைப்பை என் படத்துக்கு வைக்க விரும்பினேன். இதற்காக டைட்டில் அனுமதி வாங்க 2 மாதம் சுற்றினோம். தயாரிப்பாளர் சங்கம், இன்டர்நெட் மூலமாக தேடி சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அனுமதி வாங்கினோம். இது அப்பட ரீமேக் இல்லை.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசத்தை மையமாக கொண்ட படம். தந்தையை ஹீரோவாக நினைக்கும் மகன் அவரைப்போலவே உழைத்து வாழ்வில் எப்படி முன்னேறுகிறான் என்பதுதான் கதையின் கரு. தந்தை தாஸ் என்ற வேடத்தில் கிஷோர். மகன் ஹரி வேடத்தில் பிருத்விராஜ். இவர்களின் இரண்டு கேரக்டர் பெயர்களை சேர்த்துத்தான் ஹரிதாஸ் என்று படத்துக்கு தலைப்பிடப்பட்டது. அமுதவள்ளி என்ற முக்கிய வேடத்தில் சினேகா நடிக்கிறார். பரோட்டா சூரியுடன் பலர் நடிக்கின்றனர். ஷூட்டிங் தொடங்கிவிட்டது. தயாரிப்பு ராமதாஸ், எஸ்.மஞ்சுளா, வேல்முருகன். ஒளிப்பதிவு ரத்னவேல். இசை விஜய் ஆண்டனி.இவ்வாறு இயக்குனர் குமாரவேலன் கூறினார்.

சினேகா நடிக்கும் ஹரிதாஸ் பாகவதர் பட ரீமேக் இல்லை!

Comments