Monday, March 05, 2012நடிகை ஊர்வசி மலையாளத்தில் நடிக்கும் புதிய படம் ஒன்றில் கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம்.
கதாநாயகி, காமெடி நடிகை, குணச்சித்திர நடிகை என சகலத்திலும் அதிரிபுதிரியாக பெயர் வாங்கியவர் ஊர்வசி. தற்போது அம்மா வேடங்களிலும், காமெடி கலந்த கதாபாத்திரங்களிலும் கலக்கி்க கொண்டிருக்கும் ஊர்வசி, பேச்சியக்கா மருமகன் என்ற படத்தில் படு வெயிட்டான கேரக்டரில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மை டியர் மம்மி என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இயக்கப் போவது மகாதேவன். தீபு ரமணன் தயாரிக்கிறார்.
படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கப் போகிறாராம் ஊர்வசி. அதுதான் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. என்ன மாதிரியான கதைக்களம் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதையைச் சொன்னதுமே ஊர்வசி ஒத்துக் கொண்டு விட்டாராம்.
நாங்களும் தான் ஆவலாக உள்ளோம்...!
Comments
Post a Comment