Sunday, February 26, 2012அஜீத்தையும், வாஸ்து படுத்த ஆரம்பித்து விட்டதாம். தனது அலுவலகத்தை வாஸ்து பார்த்து மாற்றி வருகிறாராம்.
வாஸ்து பார்த்து வீடு கட்டுவது, அதை மாற்றியமைப்பது திரையுலக நட்சத்திரங்களின் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு 'தல' அஜீத் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவரது அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ளது. அதை தற்போது வாஸ்து பார்த்து அதன்படி மாற்றிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
தனது அலுவலகத்தை ஹைடெக் அலுவலகமாக மாற்றத் தான் தல இப்படி செய்வதாகவும் கூறப்படுகின்றது. மங்காத்தாவின் வெற்றிக்குப் பிறகு அஜீத் ரொம்பவே பிஸியாகிவிட்டார். தற்போது பில்லா 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையப் போவதாகவும் கூறப்படுகின்றது. கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மகள் அனௌஷ்காவுடன் விளையாடி மகிழ்கிறார். அவரது மனைவி ஷாலினி மகளை பல கோணத்தில் புகைப்படங்கள் எடுத்து அதைப் பார்த்து பூரித்துப் போகிறார்.
Comments
Post a Comment