Sunday, February 12, 2012காதலில் சொதப்புவது எப்படி?' மூலம் இணை தயாரிப்பாளரான சித்தார்த், தொடர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். 'காதலில் சொதப்புவது எப்படி?'க்கு பிறகு தொடர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. படம் இயக்குவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது பெரிய பொறுப்பு. நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
Comments
Post a Comment