Sunday, February 12, 2012சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத் குமார்.
கோச்சடையானில் தனக்கு அடுத்த முக்கியத்துவம் மிக்க வேடத்தை சரத்துக்கு கொடுத்திருக்கிறார்.
நேற்று நடந்த பிரஸ் மீட்டில் இதுபற்றி சரத்குமார் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி என்னிடம் ஒரு கதை பற்றி விவாதித்தார். மிக அருமையான கதை அது. ஆனால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால் கதை இன்னும் என் மனசில் அப்படியே இருக்கிறது.
இப்போது மீண்டும் கோச்சடையான் மூலம் அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அவர் இந்த நாட்டின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம்," என்றார்.
Comments
Post a Comment