Sunday, February 12, 2012தயாரிப்பாளரிடம் வாங்கிய ரூ.50 லட்சம் அட்வான்ஸ் திருப்பி தர மாட்டேன் என்றார் இலியானா.
கடந்த ஆண்டில் விக்ரம் படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் மோகன் நடராஜனிடம் ரூ.50 லட்சம் அட்வான்ஸ் வாங்கி இருந்தார் இலியானா. பின்னர்
இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து படத்திற்காக கொடுத்த அட்வான்ஸை திருப்பி தர வேண்டும் என்று இலியானா மீது தயாரிப்பாளர்கள்
சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது.இதுகுறித்து இலியானா தரப்பில் கூறும்போது, ‘‘ஒப்பந்தப்படி இலியானா நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.
ஆனால் அதை தயாரிப்பாளர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. விதிகளின்படி அட்வான்ஸ் பணத்தை திருப்பி தர வேண்டிய அவசியம் இல்லை.
இதுகுறித்து ஏற்கனவே தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் கொடுத்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் முறைப்படி ஒப்பந்தத்தை
பரிசீலனை செய்த பிறகே இந்த நடவடிக்கை எடுத்தனர். இலியானா மீது சட்ட ரீதியாக மோகன் நடராஜன் நடவடிக்கை எடுக்க நினைத்திருந்தால்
நீண்ட நாட்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இலியானா நடித்துள்ள தமிழ்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவரது
பெயரை கெடுக்க இந்த புகார் தரப்பட்டிருக்கிறது’’ என்றார்.
Comments
Post a Comment