2nd of January 2012சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவரும் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது: சிறு வயதிலேயே அப்பாவுடன் பல இடங்களுக்கு செல்வது எனக்கு பிடிக்கும். படப்பிடிப்புக்காக அவர் செல்லும் பல நகரங்களுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஒரு நாடோடி போல என்னை கருதிகொண்டு அலைவதை மகிழ்வாக உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிப்பதன் மூலம் படப்பிடிப்புக்காக, பல்வேறு இடங்களுக்கு என்னால் பயணப்பட முடிகிறது. இதை சுகமாக அனுபவித்து வருகிறேன்.
என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்விகேட்டு, பதில் சொல்லவில்லை என்றால் திமிர் பிடித்தவள் என்கிறார்கள். sஸ் இப்படி சொல்பவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னைப் பற்றி அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும். நான் அப்படியான குடும்ப சூழலில் இருந்து வரவில்லை. ஒவ்வொரு நாள் தூங்கச் செல்லும்போது நான் யார் என்பதை மட்டும் எனக்குள் கேட்டுக்கொள்வேன். எனது நோக்கம் சினிமாவில் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதுதான். அது மட்டுமல்லாமல், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்பதையோ, பேசுவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது நடிகையாக இருந்தாலும் சரி, பக்கத்து வீடு என்றாலும் சரி. எனது தங்கை அக்ஷரா, எப்போது நடிகையாக போகிறாள் என்கிறார்கள். அவள் சிறந்த டான்சர். என்னவாக வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்யவேண்டும். ஒரு சகோதரியாக அவளது அனைத்து முயற்சிகளுக்கும் உதவி செய்வேன். ஆனால் ஒரு போதும் அட்வைஸ் பண்ண மாட்டேன். என் குடும்பத்துக்கே அதில் நம்பிக்கை இல்லை.
Comments
Post a Comment