Monday, January 02, 2012தெலுங்கில், ஒரு பாட்டுக்கு ஆட ரூ.1 கோடி கேட்கிறாராம் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு. இந்தியில் சூப்பர் ஹிட்டான சல்மான் கானின் தபாங் படம், தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது. இப்போது இதே தபாங் படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதற்கு கபார்சிங் என்று பெயரிட்டுள்ளனர். இதில் நாயகனாக பவன் கல்யாணும், நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கின்றனர். ஹரிஸ் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதற்கட்ட சூட்டிங் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், தபாங்கில் வந்த முன்னி, தமிழில் வந்த கலசலா பாடல் போல, தெலுங்கிலும் ஒரு அருமையான குத்தாட்ட பாடல் இருக்கிறதாம். இந்த பாடலுக்கு ஆட தான் நடிகை பிபாஷா பாசுவை அணுகியுள்ளனர் கபார்சிங் படக்குழுவினர். பிபாஷாவும் ஓ.கே., சொல்லியிருக்கிறார். ஆனால் அதேசமயம் ரூ.1கோடி சம்பளம் கேட்டாராம். ஒரு பாட்டுக்கு ஒரு கோடியா...! என்று வாயடைத்து போன கபார்சிங் படக்குழுவினர், அவ்வளவு முடியாது வேண்டுமென்றால் ரூ.50 லட்சம் தருவதாக பேசியுள்ளனர். ஆனால் பிபாஷா பாசு முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால் வேறு யாராவது ஒரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment