2nd of January 2012தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடியதாக, ஹன்சிகா மோத்வானி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு வருட புத்தாண்டையும் சிறப்பாகக் கொண்டாடுவேன். 2011ம் வருடம் எனக்கு சிறப்பானது. ‘வேலாயுதம்’ உட்பட நான் நடித்தப் படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கின்றன. அடுத்து, உதயநிதி ஸ்டாலினுடன், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, சிம்புவுடன் ‘வேட்டை மன்னன்’ படங்களில் நடித்துவருகிறேன். இந்தப் படங்களும் எனக்கு பெயரைக் கொடுக்கும். இந்த வருட புத்தாண்டை எங்கு கொண்டாடினீர்கள் என்று கேட்கிறார்கள். நான் தத்தெடுத்துள்ள 20 குழந்தைகளுடன் லோகண்ட்வாலாவில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
Comments
Post a Comment