சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்!!!

Wednesday,May, 23, 2012
6. ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம்
தெலுங்கிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்டிருக்கும் இந்த‌ப் புராண படம் முதல் மூன்று தினங்களில் 1.4 லட்சங்களை வசூலித்துள்ளது. மிகச் சுமாரான வசூல்.

5. ஸ்ரீதர்
இதுவும் டப்பிங் படம். அதே தெலுங்கிலிருந்து தமிழுக்கு. சித்தார்த், ஹன்சிகா, ஸ்ருதி என தெ‌‌ரிந்த முகங்கள். காதல் கதை என்பதால் 2.4 லட்சங்களை இப்படம் வசூலித்திருக்கிறது.

4. ராட்டினம்
கௌதம் போன்ற பிரபல இயக்குனர்களால் பாராட்டப்பட்ட படம். மினிமம் பட்ஜெட் படங்களில் இப்படம் ஓரளவு தேறியிருக்கிறது. இதுவும் முந்தைய இரு படங்களைப் போல சென்ற வாரம் வெளியாகி, முதல் மூன்று தினங்களில் 22 லட்சங்களை வசூலித்திருக்கிறது. தெ‌ரிந்த முகங்கள் எதுவுமின்றி இவ்வளவு கலெக்சனை எட்டியிருப்பது ஆரோக்கியமான விஷயம்.

3. ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒருவழியாக முதலிடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு சறுக்கியிருக்கிறது ஓகே ஓகே. இதுவரை சென்னையில் இப்படம் 16 கோடிகளை வா‌ரியெடுத்திருக்கிறது. எந்திரனுக்குப் பிறகு இதுதான் அதிக வசூல். சென்ற வார இறுதியில் 30 லட்சங்களை வசூலித்திருப்பதால் மொத்த சென்னை வசூல் 20 கோடியை எட்ட வாய்ப்புள்ளது.

2. வழக்கு எண் 18/9
நல்ல படங்கள் வசூலில் நல்ல பொசிஷனில் இருப்பது தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்துக்கு நல்லது. வழக்கு எண் அப்படியொரு ஆரோக்கியமான நிகழ்வு. இப்படம் சென்ற வார இறுதியில் 40.8 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் மொத்த சென்னை வசூல் சென்ற வார இறுதி வரை 2.76 கோடி.

1. கலகலப்பு
சுந்தர் சி-யின் கலகலப்பு வசூலில் பட்டையை கிளப்புகிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 84 லட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 2.35 கோடியை வசூலித்திருக்கிறது.

Comments