தயாரிப்பாளர்கள் பற்றி ரஜினி கவலை : டைரக்டர் எழில் தகவல்!!!

Sunday, May, 20, 2012
தயாரிப்பாளர்கள் குறித்து ரஜினி கவலை தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கியவர் எழில். இவர் ‘மனம் கொத்திப் பறவை படத்தை தயாரித்து இயக்குகிறார். அவர் கூறியதாவது: காமெடி, லவ் கலந்த படம் மனம் கொத்திப் பறவை. இமேஜ் இல்லாத ஹீரோ தேவைப்பட்டதால் சிவ கார்த்திகேயனை தேர்வு செய்தேன். ஹீரோயின் ஆத்மியா. இப்படத்தை பொறுத்தவரை என் கட்டுப்பாட்டை மீறித்தான் எல்லோருமே நடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியை கூறினால் அதில் கூடுதல் வசனங்களை சேர்த்து சூழ்நிலை மாறாமல் புதிதாக ஒரு சீனை உருவாக்கி நடிப்பார்கள். அதுதான் இப்போதைய டிரெண்ட். வில்லனாக நடித்த ரவிமரியா காமெடியாக நடிக்கிறார். இசை டி.இமான். ஒளிப்பதிவு சூரஜ் நல்லுசாமி. அடுத்த மாதம் ரிலீஸ். சிங்கம் புலி, சூரி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நண்பர்களுடன் சேர்ந்து தயாரிக்கிறேன். எப்படி தயாரிப்பாளர் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை. வாய்ப்பு கேட்பதற்கு தயாரிப்பாளர்களே இல்லாத நிலை உருவாகிவிட்டது. முன்பு ஒரு தயாரிப்பாளர் பத்து, பதினைந்து படங்கள் தயாரிப்பார். இப்போது அந்த சூழல் இல்லை. புது இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் ஊரிலிருந்து தயாரிப்பாளரை அழைத்து வந்துதான் படம் உருவாக்க முடியும். ரஜினிகூட ஒருமுறை, தயாரிப்பாளர்களே இல்லையே, இப்போ வர்ற ஹீரோங்க யார்கிட்ட வாய்ப்பு கேக்குறாங்க என்று கேட்டார். இவ்வாறு எழில் கூறினார்.

Comments