முதலில் சினிமா.. அப்பறம்தான் குடும்பம்! - ஜெனிலியா!!!

Sunday, March 25, 2012
வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட நேரம் இருக்கிறது. ஆனால் இப்போது நடிப்பில்தான் எனது முழுக்கவனமும் இருக்கிறது என்றார் ஜெனிலியா. பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சமீபத்தில் மணந்தார் ஜெனிலியா. இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழில் வெளியான 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தின் ஒரிஜினல் தெலுங்கு 'பொம்மரிலு'. இதில் ஹாசினி என்ற பாத்திரத்தில் நடித்தேன். ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்தது. இப்படத்துக்கு பிறகு ஆந்திராவில் நிறைய பெண் குழந்தைகளுக்கு ஹாசினி என்று பெயர் வைத்தனர். அதேபோல் 'கதா' என்ற படத்தில் சித்ரா என்ற வேடமும் பேசப்பட்டது. ஒரே சாயல் கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். அப்படி இல்லை. ஒவ்வொரு பாத்திரத்திலும் வித்தியாசம் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை அதிகளவில் குறைத்துக்கொள்ளும் எண்ணம் இல்லை. முன்பு வருடம் முழுவதும் நடித்துக்கொண்டிருந்தேன். இப்போது சில நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்வேன். ரிதேஷை சிறுவயதிலிருந்து தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவரிடம் உள்ள குணங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே அதை நான் கண்டுபிடித்திருக்கிறேன். இப்போதைக்கு நான் முழுமூச்சாக குடும்ப வாழ்வில் ஈடுபட விரும்பவில்லை. அதற்கு இன்னும் காலமும், வயதும் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போது தெலுங்கில் 2 படம் நடித்துள்ளேன். இந்தியில் நடித்துள்ள 'சந்தோஷ் சுப்ரமணியம்' ரீமேக் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. எனக்கேற்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பேன். ஹாசினி மேடம்... அடுத்த ஐஸ்வர்யா ராய் ஆக ஆசப்படுறீங்களோ....?.

நந்தி, விருதுபெற்ற நட்சத்திரங்கள்!!!

திரையுலகில் சாதனை படைத்த நடிகைகள் சரோஜா தேவி, சாரதா ஆகியோருக்கு ஆந்திர அரசின் என்டிஆர் விருது வழங்கப்பட்டது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிகைகள் ஜெயசுதா, ஜெனிலியா உள்ளிட்டோருக்கு நந்தி விருது வழங்கப்பட்டது. ஆந்திர அரசு சார்பில் திரையுலகினருக்கு வழங்கப்படும் நந்தி விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு இணையானவை. 2009 மற்றும் 2010-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. விழாவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பங்கேற்று அரசு விருதுகளை வழங்கினார். அவர் பேசும்போது, "அரசியலும் சினிமாவும் ஒன்றுதான். அரசியலில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாது. அதுபோல் சினிமாவிலும் எந்த படம் ஜெயிக்கும் என்பது தெரியாது" என்றார். பழைய நடிகை சரோஜாதேவிக்கு என்.டி.ஆர். தேசிய விருதை கிரண்குமார் ரெட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசும்போது, "என்.டி.ஆருடன் இணைந்து படங்களில் நடித்துள்ளேன். அவர் பெயரால் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். பழைய நடிகை சாரதாவுக்கும் என்.டி.ஆர். விருது வழங்கப்பட்டது. நடிகைகள் ஜெயசுதா, நித்யாமேனன், ஜெனிலியா, பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தயாரிப்பாளர் ஏ.வி.எம். பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் நந்தி விருதுகள் பெற்றனர். பி.என்.ரெட்டி விருது இயக்குநர் ராகவேந்திர ராவ், நரசிங் ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. நாகிரெட்டி மற்றும் சக்ரபாணி தேசிய திரைப்பட விருதுக்கு மீடியா ஜாம்பவான் ராமோஜி ராவுக்கு வழங்கப்பட்டது. 'மகதீரா'வுக்கு பாப்புலர் பட விருதும், 'சொந்த ஊரு' படத்துக்கு கோல்டன் நந்தி விருதும், வேதம் (தமிழில் வந்த 'வானம்') படத்துக்கு சிறந்த படத்துக்கான கோல்டன் நந்தி விருதும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் கூடலின் வாழ்த்துகள்!

Comments