Friday, February 24, 2012ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகள் வரும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஷால் மச்சக்காரன் தானே.
நடிகர் விஷால் மச்சக்காரன் தான். இல்லையென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகள் உள்ள படமாக அவருக்கு கிடைக்குமா என்ன. திரு இயக்கிய தீராத விளையாட்டுப் பிள்ளையில் ஒன்றல்ல, இரண்டல்ல நீத்து சந்திரா, தனுஸ்ரீ தத்தா மற்றும் சாரா ஜேன் டயஸ் என மூன்று நாயகிகளுடன் நடித்தார். தற்போது என்னவென்றால் சமரனில் அவரது தோழியான த்ரிஷா மற்றும் சுனைனாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.
என்ன விஷால், உங்கள் படத்தில் பல நாயகிகள் வருகிறார்களே என்று கேட்டதற்கு, அவர் கூறியதாவது,
நான் கதாநாயகிகளைத் தேர்வு செய்வதில்லை. அதுவாக அமைகிறது. சமரன் படத்திற்கு 2 நாயகிகள் தேவைப்பட்டனர். அதனால் த்ரிஷா மற்றும் சுனைனாவைத் தேர்வு செய்தனர். த்ரிஷா என்னுடைய தோழி என்பதால் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும். சுனைனா ஒரு திறமையான நடிகை. நான் சமரன் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். ஒரு மாதமாக பாங்காக்கில் தங்கி படப்பிடிப்புக்குச் செல்வது நல்ல அனுபவமாக உள்ளது.
என்னுடைய தீராத விளையாட்டுப் பிள்ளை காதல் கலந்த காமெடிப் படம் என்பதால் தற்போது த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன். வரும் ஏப்ரலுக்குள் படப்பிடிப்பை முடித்து கோடையிலேயே ரிலீஸ் பண்ணலாம் என்று திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ஆமாமா, சீக்கிரம் வெளியிடப் பாருங்க...!
Comments
Post a Comment