Sunday, February 19, 2012நயன்தாராவும், பிரபுதேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். பிரபுதேவாவை மணக்க நயன்தாரா சினிமாவுக்கு முழுக்க போட்டு காத்து இருந்தார். இந்து மதத்துக்கும் மாறினார். ஆனால் பிரபுதேவா திருமணத்துக்கு தாமதம் செய்தார். அத்துடன் முதல் மனைவி குழந்தைகளை தன்னுடன் அழைத்து தங்க வைத்துக் கொண்டார்.
எங்கேயும் காதல் படத்தை இயக்கிய போது அதில் நாயகியாக நடித்த ஹன்சிகாவுக்கும், பிரபுதேவாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. படம் முடிந்த பிறகும் இருவரும் செல்போனில் பேசி தொடர்பை வலுப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
தற்போது நாகார்ஜுனா ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். அஜீத்துடன் நடிக்கவும் பேசி வருகின்றனர். சிம்பு ஜோடியாக நடிக்கவும் பெரிய இயக்குனர் ஒருவர் நயன்தாராவை அணுகி பேசி வருகிறார்.
பிரபுதேவாவுடன் தீவிர காதலில் இருந்தபோது அவரது பெயரை நயன்தாரா கையில் பச்சைக் குத்தி இருந்தார். இப்போது அப்பெயருடன் படப்பிடிப்புக்கு செல்வது அவருக்கு உறுத்தலாக இருக்கிறது. எனவே பிரபுதேவா பெயரை அழித்து விட முடிவு செய்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நீக்கலாமா? என்று யோசிக்கிறார்.
Comments
Post a Comment