Sunday, April 01, 2012திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா நடித்த படம் தமிழில் வெளிவருகிறது. இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சமீபத்தில் மணந்தார் நடிகை ஜெனிலியா. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று அறிவித்தார். திருமணத்துக்கு முன்பு அவர் நடித்த படம் உருமி. சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். பிரபுதேவா, பிருத்விராஜ், வித்யாபாலன், தபு, நித்யா மேனன் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறார் எஸ்.தாணு. வைரமுத்து பாடல்களுக்கு தீபக் தேவ் இசை அமைத்துள்ளார்.
இப்படம் குறித்து ஜெனிலியா கூறும்போது, 15,ம் நூற்றாண்டையும் 21,ம் நூற்றாண்டையும் கண்முன் நிறுத்தும் படம் இது. தமிழகத்தை ஆண்ட சேர மன்னனின் சரித்திரத்தை சொல்லும் கதை. இப்படத்துக்காக களறி சண்டை பயிற்சி பெற்றேன். இந்த படத்துக்கு உடல்ரீதியான உழைப்பு மட்டுமல்லாமல் சீரியஸான முகபாவங்களுடன் கூடிய நடிப்பும் தேவைப்பட்டது. படத்தில் மிகவும் அரிதாகவே சிரித்திருக்கிறேன். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் எனக்கு இதுகொஞ்சம் கடினமாகவே இருந்தது. மலையாளத்தில் இப்படம் ஏற்கனவே வெளியாகி நல்ல பெயரை பெற்றுத் தந்தது. சீக்கிரமே தமிழில் ரிலீஸ் ஆகிறது என்றார்.
Comments
Post a Comment