Saturday, March 03, 2012இன்டர்நெட்டில் தனது படு கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் சினேகா உல்லால். ‘என்னை தெரியுமாÕ படத்தில் நடித்தவர் சினேகா உல்லால். சிம்புவுடன் வானம் படத்தில் நடிக்க இருந்தார். பின் திடீரென படத்திலிருந்து விலகினார். தற்போது கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது படு கவர்ச்சியான வீடியோ ஆல்பத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டிருக்கிறார். படுக்கையில் மெல்லிய ஆடை அணிந்து அவர் படுத்து உருளும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது பற்றி அவர் கூறியதாவது: ஐதராபாத்தில் மழை தொடங்கி இருப்பதால் பட ஷூட்டிங் தடைபட்டிருக்கிறது. இதனால் ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் வீடியோ ஆல்பம் தயாரிக்கலாம் என்று எனது புகைப்பட நிபுணர் ஆலோசனை கூறினார். இதையடுத்து கவர்ச்சி வீடியோ ஆல்பத்தில் நடித்தேன். இதை வெளியிடும் எண்ணம் இல்லை. ஆனாலும் புகைப்பட நண்பர் இதை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார். வரவேற்பு நன்றாக இருக்கிறது. முதுகில் அடிபட்டிருந்ததால் ‘வானம்Õ படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதே போல் விஷாலுடன் சமரன் படத்துக்காக வந்த வாய்ப்பும் ஏற்க முடியவில்லை. இந்த ஆண்டு தமிழில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க உள்ளேன். தனுஷுடன் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அதேபோல் ஜீவா, ஜெயம் ரவியுடனும் நடிக்க ஆசை. இவ்வாறு சினேகா உல்லால் கூறினார்.
Comments
Post a Comment