Wednesday, February 15, 20126வது ஆசிய திரைப்பட விருதுகள் விழாவுக்காக ஹாங்காங் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆசிய திரைப்படங்களை உலக அளவில் பிரதிபலிக்கும் வகையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்டு, 6வது ஆசிய திரைப்பட விருது விழா ஹாங்காங்கில் நடக்கிறது. இதில் ஆசியாவில் இருக்கும் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் சிறந்த நடிகர், நடிகையர் சிறந்த படம், இயக்குநர் உள்ளிட்ட 14 பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் சிறப்பு விருதாக வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட 3 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது.
இந்த விருதுகள் அனைத்தும் மக்களின் ஓட்டு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது. இதற்கான ஓட்டு பதிவு பிப்ரவரி 13ம் தேதி முதல் தொடங்கி, மார்ச் 5ம் தேதி வரை நடக்கிறது. ஓட்டுகளை ஆசிய திரைப்பட விழாவுக்கான பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நடிகர், நடிகை, படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் மார்ச் 19ம் தேதி விருது வழங்கப்பட இருக்கிறது.
Comments
Post a Comment