அப்பா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு நான் என்ன கிழவன் ஆகி விட்டேனா? என்று நடிகர் அரவிந்தசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் கதாநாயகி சமந்தாவின் அப்பாவாக அரவிந்த்சாமி நடிக்கப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மணிரத்னம் தரப்பு இதனை மறுக்காத நிலையில், சம்பந்தப்பட்ட நடிகர் அரவிந்தசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அப்பா வேடத்தில் நடிக்கும் அளவிற்கு நான் கிழவனாகிவிட்டேனா? இப்படியெல்லாம் குருட்டுத்தனமாக யோசிக்க சிலரால் எப்படி முடிகிறது? நான் எந்த வேடத்திலும் நடிப்பதாக இல்லை. மணிரத்னம் என்னை அணுகவில்லை. ஒருவேளை அவரே கேட்டிருந்தாலும் நடித்திருக்க மாட்டேன். இப்போது நான் தொழிலதிபராக இருக்கிறேன். எனக்கு இனி தொழில்களைக் கவனிப்பதுதான் முதலும் கடைசியுமான வேலை, என்று கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment