Thursday, January 12, 2012நடிகர் விஜய்யின் நண்பன் படம் ரிலீஸ் ஆனதை அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இன்று கொண்டாடினர். கோயில்களில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இன்று சிறப்பு பூஜை செய்தார்.
ரசிகர்கள் விஜய் பேனருக்கு பால் மற்றும் பீரபிஷேகம் செய்து கொண்டாடினர்!
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'நண்பன்' திரைப்படம் இன்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படம், பாலிவுட்டின் 'த்ரீ இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்ததால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சென்னையில் ஆல்பர்ட், தேவி, சத்யம், காசி உள்ளிட்ட பிரபல திரையரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள விஜயின் பேனருக்கு அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர்.
பாட்டில் பாட்டிலாக பீர் வாங்கி பேனர்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். மேளம் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரசிகர்களுடன்...
தேவி தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. சத்யம் திரையரங்கில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட நண்பன் பட குழுவினர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து சத்யம் திரையரங்கில் 'நண்பன்' படத்தை பார்த்து ரசித்தனர்.
ஜீவா ரசிகர்களுடம் கொண்டாட்டம்
இந்தப் பட வெளியீட்டை, படத்தின் இன்னொரு நாயகனான ஜீவாவின் ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
Comments
Post a Comment