தன்னை புதுமுகமாகப் பார்க்கும்படி ஹிந்தி ரசிகர்களுக்கு தமன்னா வேண்டுகோள்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா ஹிந்தியில் மட்டும் ஒரு வெற்றிப் படத்தில் கூட நடிக்கவில்லை. அவர் நடித்த நேரடி ஹிந்திப் படங்கள் தோல்விதான் அடைந்தன. பாகுபலி' படம் மட்டுமே ஹிந்தியில் வெளியாகி அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. தற்போது, நவாசுதீன் சித்திக் நடிக்கும் 'போலே சுடியான்' என்ற படத்தில் நடிக்கிறார் தமன்னா. அந்தப் படத்தில் தன்னை புதுமுகமாகப் பார்க்கும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு ஹிந்திப் படம். ஹிந்தி ரசிகர்கள் என்னை புதுமுகமாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். நான் நடித்த படங்களில் எனக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்து நடிப்பதை விட, இந்தக் கதாபாத்திரத்தில் எமோஷன் மீது கவனம் வைத்து நடிக்கப் போகிறேன். இம்மாதிரியான கதையில் நான் இதுவரை நடித்ததில்லை. தென்னிந்தியாவில் இப்படி கிராமத்துக் கதைகளில் நடித்திருக்கிறேன். ஆனால், பாலிவுட்டில் நடித்ததில்லை. நவாசுதீன் போன்ற நடிகருக்கு ஜோடியாக நடிப்பது பெருமையான விஷயம். அவருடைய மிகப் பெரிய ரசிகையும் கூட. அவருடன் ஒரே பிரேமில் நானும் இருப்பேன் என்பதை நினைக்கும் போது உற்சாகமாக உள்ளது,” என்கிறார் தமன்னா.இந்தப் படத்தை நவாசுதீன் சகோதரர் ஷமாஸ் சித்திக் இயக்குகிறார்.

Comments