ஐதராபாத்தில் குடியேறும் கமலின் பாபநாசம் படத்தில் மகளாக நடித்த நிவேதா தாமஸ்!

ஜெய்யுடன் நவீன திருவிளையாடல் படத்தில் நாயகியாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன்பிறகு கமலின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்தவர், தற்போது ரஜினியுடன் தர்பார் படத்திலும் அவரது மகளாகவே நடித்து வருகிறார்.

அதேசமயம் தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்.டி.ஆர், ரவி தேஜா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நிவேதா தாமஸ், தொடர்ந்து சில படங்களில் நடிப்பதற்கும் கால்சீட் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில், இதுவரை சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு சென்று நடித்து வந்த அவர், அடிக்கடி சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் பிரயாணம் செய்வதை தவிர்க்க நினைக்கிறார். அதனால் தற்போது ஐதராபாத்திலேயே நிரந்தரமாக குடியேற வீடு பார்த்து வருகிறார் நிவேதா தாமஸ்

Comments