விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்'

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் அனுக்கிரகீதன் ஆண்டனி என்கிற படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியானது.

தற்போது, ‛ஹாய் ஹலோ காதல்' என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற அறிவிப்பு இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ஜூன் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சர்ஜுனோ காலித் ஹீரோவாக நடிக்கிறார்.

மலையாளத்தில் இளம் பாடலாசிரியராக வலம் வரும் விநாயக் சசிகுமார் இயக்குவதன் மூலம் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்கிறார். இவர் பஹத் பாசில் நடித்த கும்பலாங்கி நைட்ஸ், அதிரன், வரதன் ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments