வெண்ணிலா கபடி குழு 2 ரெடி!

2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் ‘வெண்ணிலா கபடி குழு’.  இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் ‘வெண்ணிலா கபடி குழு 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு செல்வகணேஷ் இசை அமைக்க, கிருஷ்ண்சாமி ஒளிப்பதிவு செய்கிறார், சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ளார். கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை ஆகிய படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.

நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொலி கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக ‘வெண்ணிலா கபடி குழு 2’படம் அமையும்.

Comments