மீண்டும் சாதி வெறியை தூண்டும் ப.ரஞ்சித் “ராஜராஜ சோழன் காலத்தில்தான் சாதிக்கு ஒரு சுடுகாடு” வலுக்கும் கண்டனங்கள்!

சாதி ரீதியான ஒடுக்கு முறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் பேசி இருந்தார். குறிப்பாக தாழ்த்தப்பட்ட  சமூகம், நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான் என ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் ராஜராஜ சோழன்தான் தங்களின் முன்னோர்களின் சொத்துகளை பறித்துக்கொண்டார் என்றும், தேவதாசி முறையும் அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்றும் , அவரின் பெயரை சொல்லிக்கொண்டு 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்றும் பேசியிருந்தார். இவரது பேச்சு தமிழக மக்களிடையே குறிப்பாக குறிப்பிட்ட பெரும்பான்மை இன மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
மேலும், இவரது பேச்சுக்கு தழிகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு சமுதாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரஞ்சித் மீது 3 பிரிவுகளின் கீழ் சாதி, மத, மொழி மீது விரோத உணர்வை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரஞ்சித், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, “பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கும் போது ஆயிரம் காலத்துக்கு முன்பு வாழ்ந்த மன்னரைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?  வன்முறையை தூண்டும் வகையில் பேசவில்லை என்றால் ஏன் நீதிமன்றம் வர வேண்டும்?” என காட்டமாக கேட்டார். அடுத்த கட்ட விசாரணையில் ராஜராஜசோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதற்கு தங்களிடம் சாட்சியங்கள் உண்டா என கேட்டதற்கு ரஞ்சித்தோ அல்லது அவருடைய வக்கீல்களோ எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.
தொடர்ந்து முன் ஜாமீன் பெற முடியாமல் எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் உள்ள அவர் இப்போது நீதிமன்றத்துக்கும் அஞ்சாமல் மேலும் ஒரு கருத்தை கூறியது பதற்றத்தை உண்டாக்கி வருகிறது.
 
நேற்று ஹிந்து ஆங்கில இதழுக்கு அவர் பேட்டி அளிக்கையில், சிறு வயதிலிருந்தே தான் தாழ்த்தப்பட்டவன் என்ற காரணத்துக்காக தங்கள் கிராமப் பகுதிகளில் ஒதுக்கப்பட்டு வந்ததாகவும், சாதி கொடுமைகளை தான் உணர்ந்ததால் தான் பாதிக்கப்பட்டதாகவும் கூறியது மட்டுமல்லாமல், ராஜராஜ சோழன் காலத்தில்தான் ஒவ்வொரு சாதிக்கும் என்று தனி தனி சுடுகாடுகள் இருந்தது, இந்த முறை முந்தைய மன்னர்களால் தொடக்கி வைக்கப்பட்ட போதிலும் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான் இந்த முறை பெரிதும் கடை பிடிக்கப்பட்டது என்று கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சாதிகள் மறையவில்லை என்றாலும், சாதி வேறுபாடுகள் தற்போது படிப்படியாக மறைந்து மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறு அவர் தொடர்ந்து ஆதாரமில்லாமல்  பழைய வரலாற்று சம்பவங்களை பேசி கொந்தளிப்பை உருவாக்கக் காரணம்  குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில்:
 
ரஞ்சித் இவ்வாறு பேசுவதற்கு காரணம் இந்துக்களுக்கு எதிரான சக்திகள் அவரை பின்னாலிருந்து தூண்டுவது மட்டுமன்றி அவருக்கு உண்டான பொருளுதவிகளையும் செய்து வருகின்றனர். இதற்கு காரணம் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் வடமாநிலங்களில் பாஜகவை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கேரளா, ஆந்திரா, தமிழ் நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கான தனி தொகுதிகளில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் தொகுதியை பாஜகவே வென்றுவிட்டது. தாழ்த்தப்பட்டோர் பாஜகவுக்கே வாக்களித்து விட்டனர். இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்துக்கள் ஓரணியாக திரண்டுவிட்டார்கள் என கருதும் கிறிஸ்தவ மெஷினரிகளுக்கு இது கிலியை ஏற்படுத்திவிட்டது.
 
இதே போன்ற நிலை தமிழகத்தில் எப்போதும் ஏற்படக் கூடாது, ஏற்கனவே தங்களுக்கான இந்து எதிர்ப்பு பணிகளை  திருமாவளவன் பொறுப்புடன் பார்த்து வந்தாலும் வன்னியர்கள் பெரும்பான்மை உள்ள இடங்களில் மட்டுமே திருமாவளவனால் அரசியல் செய்ய முடிகிறது. ஆனால் முக்குலத்தோர் பெரும்பான்மையை வாழும் பகுதிகளில் திருமாவளவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
 ஆகவே ஆங்காங்கு பழைய வரலாற்றை தட்டி எடுத்து புதிய பிரச்சனைகளை உருவாக்க அந்தந்த பகுதிகளில் பிரபலமானவர்களை தேர்ந்தெடுத்து புதிய திருமாவளவன்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் கிறிஸ்தவ மெஷினரிகள் கல்லா கட்ட முடியும், மேலும் அரசியலிலும் சாதிக்கலாம் என்ற முடிவில் மெஷினரிகள் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ரஞ்சித்தை உசுப்பி வருகின்றனர். தனக்கு இனி சினிமாவில் எதுவும் தேறாது என்ற நிலைக்கு வந்து விட்ட ரஞ்சித் தானும் திருமாவளவன் போல கல்லா கட்டலாம், அரசியலில் ஓரளவு செல்வாக்கு பெறலாம் என  நினைத்தே தீவிர நடவடிக்கைகளில் இறங்கி விட்டனர்.
 
அதனால்தான் ராஜராஜசோழன் சாதி தேவரினம் என கூறப்படுவதால் ராஜராஜ சோழனை வம்புக்கிழுத்து அதன் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கும் அந்த இனத்துக்கும் இடையே கலவரம் உண்டாக்குவதே இவர்களின் நோக்கம் என கூறப்படுகிறது. பாவம் இதனால் பாதிக்கப்படப் போவது அதிக அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் தான் என தெரிந்திருந்தும் தங்கள் சுயநலன்களுக்காக எதையும் செய்ய முன்வந்து விட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. எனவே, தாழ்த்தப்பட்ட இன மக்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் இருக்க வேண்டும் எனவும் அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.    

Comments