ஹாலிவுட்டிற்கு செல்லும் வடிவேலு.. தமிழ் சினிமாவுக்கு கும்பிடு போடுகிறார்!

தமிழ் சினிமாவே வேணாம் என ஹாலிவுட்டிற்கு செல்கிறார் வைகை புயல் வடிவேலு என சினிமா வட்டாரங்களில் தற்பொழுது செய்திகள் வந்துள்ளது.தமிழ் சினிமாவில் காமெடி மன்னனாக வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு. 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினையில் இருந்து நடிக்க முடியாமல் இருக்கிறார். சமீபத்தில் நேசமணி ட்ரெண்டிங் ஆனது. ஆனால் அது ஏன் வந்தது என்றே தெரியவில்லை.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் நினைத்தால் ஹாலிவுட் படத்தில் கூட நடிப்பேன் என அசால்ட்டாக கூறினார். ஆனால் அவர் கூறியது போலவே பன்னாட்டு நிறுவனங்களின் வாய்ப்புகள் வடிவேலு வீட்டின் கதவை தட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரபல ஆன்லைன் பிளாட்பாரம் நிறுவனம் ஒன்று வடிவேலுவை வைத்து காமெடி சீரிஸ் தொடரை உருவாக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வடிவேலுவும் வெளியிடவில்லை. இதைப் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments