மெர்சல்” மகனுக்கு பரிசு கொடுத்த விஜய்!

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் முன்றாவது முறையாக அட்லியுடன் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் இன்னும் பலர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ‘மெர்சல்' திரைப்படத்தில் விஜய்க்கு மகனாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற அக்‌ஷத் நேற்று தனது பிரந்தாநாளை கொண்டாடினார். இந்நிலையில் நடிகர் விஜய்யை ‘தளபதி 63' படத்தின் படப்பிடிப்புக்கு சென்று அவரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்தை பெற்றிருக்கிறார். சிறுவனை வாழ்த்திய விஜய், பின்னர் சிறிய கேமரா ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார்.

விஜய் நடித்து வரும் அட்லியின் படத்தின் பர்ஸ்ட லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments