எந்த கட்சியில் சேருகிறார் சத்யராஜின் மகள்! பரபரக்கும் திவ்யா சத்யராஜ்!

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யா ராஜ் அரசியலி¢ல் குதிக்க இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. திவ்யா சத்யராஜ் மருத்துவராக இருக்கிறார். ஊட்டச்சத்து நிபுணராகவும் அவர் இருந்து வருகிறார்.
இவர் தொடர்ந்து சமூக அக்கறை உடன் செயல்பட்டு வந்ததால் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாம் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அதற்கு திவ்யா மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர், அரசியல் பற்றி நான் எப்போதுமே ஆர்வமாக இருந்து வருகிறேன். ஆனால் ஒருபோதும் அரசியலை நோக்கி சாய்ந்திருக்கவில்லை. அனைவருக்கும¢சேவை செய்யும் ஒரு அமைப்பு தேவை.
சமுதாயத்தை மேம்படுத்துவதற்கு ஒரு அமைப்பு இருக்க வேண்டும். மேலும் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் விரைவில் அரசியலில் சேர இருப்பதாக திவ்யா கூறியிருக்கிறார். கட்சி எது என்பதை அப்போது அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். 

Comments