அர்ஜுன், விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன்' ஹிந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி!

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'கொலைகாரன்'. கடந்த நான்கு வாரங்களாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 15 கோடி வரையில் இந்தப் படம் வசூலித்து லாபத்தைக் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்பதாலும், படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பின் காரணமாகவும் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். படத்தைப் பார்த்த சில பாலிவுட் முன்னணி நிறுவனங்கள் இதற்கான பேச்சு வார்த்தைகளை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்களாம்.

2 கோடிக்கும் அதிகமாக ஹிந்தி ரீமேக் விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜுன் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் ஒரு சீனியர் ஹீரோவும், விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தில் ஒரு இளம் முன்னணி ஹீரோவும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என பாலிவுட் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறார்களாம். யார் உரிமையை வாங்குகிறார்களோ உடனடியாக படத்தின் ரீமேக்கை ஆரம்பிப்பார்கள் என்கிறார்கள்.

Comments