நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23.06.2019 ஞாயிற்று கிழமை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் , சத்யா ஸ்டூடியோ ( டாக்டர் MGR ஜானகி மற்றும் அறிவியல் மகளீர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
 
தனை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்து திரையுலகுக்கு விடுமுறை அளிக்குமாறு நடிகர் சங்கம் சார்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் நடிகர் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Comments