அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் இந்த மாதிரியான ஒரு காட்சி இடம்பெறுவதாக கசிந்த செம்ம அப்டேட் !

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்த படத்தை காண பலரும் ஆவலுடன் இருக்கின்றனர் . அப்படியிருக்க, இந்த படம் பிங்க் ரீமேக் என்றாலும் பல காட்சிகள் மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது, அந்த விதத்தில் இதில் அஜித்-வித்யா பாலன் சம்மந்தப்பட்ட காட்சிகள் புதிதாக சேர்த்துள்ளனர்.
 
அதில் அஜித்-வித்யா பாலன் ஜோடி பல ஆண்டுகளாக திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் இருந்து வருவது போல் சில காட்சிகள் இடம்பெறுவதாக ஒரு பிரபலம் தெரிவித்துள்ளார் . மேலும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என வினோத் நம்பிக்கையாக இருந்து வருகிறார்.

Comments