பரியேறும் பெருமாள் கதிர் நடிக்கும் சர்பத் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் கதிர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்,இதைத்தொடர்ந்து சத்துரு திரைப்படத்தில் நடித்திருந்தார், தற்போது இவர் தளபதி 63 திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
சாமுராய், காதல், கல்லூரி ஆகிய திரைப்படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரபாகரன் இயக்கத்தில் சர்பத் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து சூரி, இளம் நடிகை ரகசியா என பலர் நடித்து வருகிறார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுகல்லில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Comments