ரஜினி...அஜித்... வராத நடிகர் சங்க தேர்தல்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தின் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது.தற்போது நாசர் இந்த சங்கத்தின் தலைவராக உள்ளார். கடந்த சில நாட்களாக பல பிரச்சினைகள் குறித்து செய்திகள் வெளியானது. ஏற்கனவே பதவியில் இருந்த விஷாலின் ‘பாண்டவர் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிட்டனர்.
 
இந்த அணியை எதிர்த்து நடிகர் கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி களம் இறங்கியிருக்கிறது. இதில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த், துணைத்தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஒரு வழியாக நேற்றோடு நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்து விட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள்3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தும் 1604 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
தர்பார் சூட்டிங் மும்பையில் நடப்பதாலும் தபால் ஓட்டு தாமதமாக வந்ததாலும் தன்னால் வாக்களிக்க சென்னைக்கு வரவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், விஷால், சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களித்தனர். ஆர்யா சைக்கிள் ஓட்டியபடியே வந்து வாக்களித்தார்.
 
அஜித் வாக்களிக்க வரவில்லை. ஆர்யா சைக்கிளில் வந்து வாக்களித்தார். நடிகர் சந்தானம் வாக்களித்துவிட்டு தனது ஆதரவு பாண்டவர் அணிக்கே என தெரிவித்தார். முன்னாள் நடிகர் மைக் மோகன் பெயரில் யாரோ வாக்களித்துவிட்டனர். இந்த தேர்தலில் 85 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 1, 604 நேரில் வாக்களித்துள்ளனர். 900 பேர் தபால் ஓட்டுகள் மூலம் வாக்களித்துள்ளனர்.
வாக்குப்பெட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வருகிற ஜூலை மாதம் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாமல் போனதற்கு கமல் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Comments