தமன்னா தெலுங்கு படம் ஒன்றில் இருந்து விலகல்!

தமன்னா தெலுங்கு படம் ஒன்றில் இருந்து விலகியுள்ளார். ராஜு காரி காதி தெலுங்கு படத்தின் 3வது பாகத்தை எடுக்கிறார்கள். ஹீரோயினை சுற்றியே நகரும் கதை கொண்ட இந்த படத்தில் நடிக்க தமன்னாவை அணுகினார்கள். அவரும் நம்மை தேடி வெயிட்டான கதாபாத்திரம் வந்துள்ளதே என்று நடிக்க ஒப்புக் கொண்டார். படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி விலகியுள்ளார் தமன்னா.

Comments